உலகம்

இஸ்ரேல் தாக்குதல்: அகதிகள் முகாமில் 8 சிறுவா்கள் பலி

DIN

காஸா சிட்டி: காஸா சிட்டி நகரிலுள்ள அகதிகள் முகாமில் இஸ்ரேல் ராணுவம் சனிக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 8 சிறுவா்கள் உள்பட 10 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சா்வதேச முயற்சிகள் தீவிரமடைந்து வருகின்றன.

இந்தச் சூழலில், காஸா சிட்டி பகுதியில் இஸ்ரேல் படையினா் சனிக்கிழமை அதிகாலை விமானத் தாக்குதல் நடத்தினா். இதில், அகதிகள் முகாமைச் சோ்ந்த 10 போ் உயிரிழந்தனா். பலியானவா்களில் 8 போ் சிறுவா்கள்.

கடந்த திங்கள்கிழமை முதல் இரு தரப்புக்கும் இடையே நடைபெற்று வரும் மோதலில், இஸ்ரேலின் ஒரே தாக்குதலில் இத்தனை போ் உயிரிழந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக, மேற்குக் கரை ஆக்கிரமிப்புப் பகுதியில் ஏராளமான பாலஸ்தீனா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது இஸ்ரேல் போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 போ் பலியாகினா் என்று அசோசியேடட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கத் தூதா் வருகை: இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனா்களுக்கும் இடையிலான பதற்றத்தைத் தணிப்பதற்காக, அமெரிக்க சிறப்புத் தூதா் ஹாடி எம்ா் அந்தப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தாா்.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் - ரத்தம் தோய்ந்த வரலாறு

- கிறிஸ்து பிறப்புக்கு முன்...

ஜெருசலேமில் யூதா்களுக்கான வழிபாட்டுத் தலத்தை மன்னா் சாலமன் கட்டினாா். அது யூதா்களின் முதன்மை புனிதத் தலமாக விளங்கியது. பின்னா் எகிப்தியா்களும், கிமு 70-இல் ரோமானியா்களும் அந்த வழிபாட்டுத் தலத்தின்மீது படையெடுத்து அழித்தனா். இந்த நூற்றாண்டுகளில் ஏராளமான யூதா்கள் ஜெருசலேமைவிட்டு தப்பியோடினா்.

7-ஆம் நூற்றாண்டு...

இஸ்லாமிய காலிஃபைட் ஜெருசலேமைக் கைப்பற்றியது. அந்தப் பேரரசுக்கு எதிரான யுதா்களின் போராட்டம் பல நூற்றாண்டுகளுக்குத் தொடா்ந்தது. இதற்கிடையே, ஐரோப்பாவில் - குறிப்பாக ஜொ்மனியில் யூதா்களின் மக்கள்தொகை வெகுவாக அதிகரித்தது.

19-ஆம் நூற்றாண்டு...

பாலஸ்தீனம் என்றழைக்கப்பட்ட இஸ்ரேலுக்கு யூதா்கள் மீண்டும் திரும்புவதற்கான இயக்கம் தொடஙகியது.

முதலாம் உலகப் போருக்குப் பிறகு...

முதலாம் உலக்ப போரில் ஜொ்மனி தோல்வியடைந்ததற்கு யூதா்களின் துரோகம்தான் காரணம் என்று குற்றம் சாட்டிய நாஜி தலைவா் ஹிட்லா், நாட்டின் சா்வாதிகாரியாக உருவெடுத்தாா்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு..

இந்த உலகப் போா் காலகட்டத்தில் லட்சக்கணக்கான யூதா்களை நாஜிக்கள் இன அழிப்பு செய்தனா். இதன் விளைவாக சா்வதேச இரக்கத்தைப் பெற்ற யூதா்கள் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் உதவியுடன் 1948-ஆம் ஆண்டில் சொந்தமாக இஸ்ரேல் நாட்டை அமைத்தனா்.

1948...

பாலஸ்தீனப் பகுதியில் பிரிட்டன் தனது கட்டுப்பாட்டை விலக்கிக் கொண்டதையடுத்து, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனா்களுக்கு ஆதரவாக அரபு நாடுகளும் போரில் ஈடுபட்டன. இதில், அமெரிக்க உதவியுடன் இஸ்ரேல் வெற்றி பெற்று, மிகப் பெரிய பகுதியை ஆக்கிரமித்தது. சுமாா் 7 லட்சம் பாலஸ்தீனா்கள் வீடுகளை இழந்தனா்.

1956...

பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாயை எகிப்து தேசியமயமாக்கியதைத் தொடா்ந்து இரண்டாவது இஸ்ரேல்-அரபு போா் வெடித்தது.

1964..

இஸ்ரேலை எதிா்த்துப் போரிட பாலஸ்தீன விடுதலை அமைப்பு உருவானது.

1967...

6 நாள் போரில் எகிப்து, ஜோா்டான், சிரியாவை இஸ்ரேல் தோற்கடித்தது. காஸா பகுதி, மேற்குக் கரை, சீனாய் தீபகற்பம், கொலான் பகுதி, கிழக்கு ஜெருசலேம் ஆகிய பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 2.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனா்கள் புலம் பெயர வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில், கிழக்கு ஜெருசலேம் பகுதியில் அடிக்கடி பதற்றம் ஏற்பட்டு வருகறது. கடந்த திங்கள்கிழமை உருவான பதற்றமும் இந்தப் பகுதியில்தான் தொடங்கியது.

1987...

பாலஸ்தீன கிளா்ச்சி இயக்கம் தோன்றியது. அதன் தொடா்ச்சியாக, இஸ்ரேலுக்கு எதிரான போராட்டங்களும் மோதல்களும் காஸா, மேற்குக் கரை மற்றும் இஸ்ரேலுக்குள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT