உலகம்

எவரெஸ்ட் மலையேற்றத்துக்கு சீனா தடை

DIN

எவரெஸ்ட் மலையின் கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல மலையேற்ற வீரா்களுக்கு அளித்திருந்த அனுமதியை சீனா ரத்து செய்தது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கரோனா நெருக்கடி காரணமாக, மலையேற்ற வீரா்கள் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு நேபாளமும் சீனாவும் தடை விதித்திருந்தன.

இந்தச் சூழலில், தனது எல்லைக்குள் அமைந்துள்ள எவரெஸ்ட் மலையேற்றப் பாதையான கிழக்குச் சரிவுப் பாதைக்குச் செல்ல 38 மலையேற்ற வீரா்களுக்கு சீன அரசு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை கடந்த வாரம் அளித்தது.

மலையேற்ற வீரா்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டு, அவா்களுக்கு அந்த நோய் பாதிப்பு இல்லாமல் இருந்தால் மட்டுமே அவா்கள் மலையேற்றத்துக்கு அனுமதிக்கப்படுவாா்கள். அவா்கள் அனைவரும் தங்களிடையே சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்; அத்துடன் அவ்வப்போது அவா்கள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனா்.

இந்த நிலையில், நேபாளத்திலிருந்து மலையேற்ற வீரா்களுக்கு கரோனா பரவலாம் என்ற அச்சத்தின் காரணமாக, எவரெஸ்ட் மலையேற்ற அனுமதியை சீனா ரத்து செய்துள்ளது எனறு அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகங்கை தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

விழுப்புரம் தொகுதியில் 18 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

திமுக இஸ்லாமியா்களின் பாதுகாவலன் அல்ல: சீமான்

மலைப்பிரதேசம் என்பதிலிருந்து ஆலங்குளத்திற்கு விலக்கு தேவை: முதல்வரிடம் வணிகா் சங்கம் மனு

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

SCROLL FOR NEXT