உலகம்

சிங்கப்பூர் சிறையில் 5000 கைதிகளுக்கு கரோனா பரிசோதனை

PTI

சிங்ப்பூரின் சாங்கி சிறைச்சாலையில் சுமார் 5000 கைதிகள், ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை செய்ய உள்ளனர். 

சிறையில் பணிபுரியும் சமையல் செய்யும் நபருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அங்குள்ள கைதிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது என்று சிங்கப்பூர் சிறை சேவை (எஸ்.பி.எஸ்) தெரிவித்துள்ளது.

39 வயதான சமையலாளர் கடந்த புதன்கிழமை கடைசியாக வேலை செய்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் மூக்கு ஒழுகுதல் ஏற்பட்ட நிலையில், மருத்துவச் சிகிச்சையில் அவருக்குத் தொற்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டார். 

நாட்டில் இதுவரை 61,500க்கும் மேற்பட்டோர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 31 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வேங்கைவயலில் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்!

அட்லியின் தீயான நடனம்: வைரலாகும் விடியோ!

பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: மக்கள் தேர்தல் புறக்கணிப்பு!

உரத் தொழிற்சாலையை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு: 5 கிராம மக்கள் போராட்டம்!

SCROLL FOR NEXT