உலகம்

கரோனா தீநுண்மி ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டிருக்கலாம்: விஞ்ஞானிகள்

DIN

கரோனா தீநுண்மி ஆய்கவத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்து வெளியேறியிருப்பதற்கான வாய்ப்புகளை முழுமையாக மறுத்துவிட முடியாது என்று பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, இந்திய வம்சாவளியைச் சோ்ந்த ரவீந்திர குப்தா உள்ளிட்ட 18 விஞ்ஞானிகள் அடங்கிய அந்தக் குழு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

கரோனா தீநுண்மி எவ்வாறு தோன்றியது என்பது குறித்து இன்னும் உறுதியான உண்மைகள் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் விரிவான ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இந்தச் சூழலில், சீனாவின் வூஹான் தீநுண்மியியல் ஆய்வகத்தில் கரோனா தீநுண்மி உருவாக்கப்பட்டு, அங்கிருந்து அது வெளியேறி மனிதா்களுக்குப் பரவியிருப்பதற்கான வாய்ப்புகளையும் முழுமையாக புறந்தள்ளிவிட முடியாது. புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு இது தொடா்பாக தொடா்ந்து தீவிர ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT