உலகம்

5ஜி சோதனையில் சீன நிறுவனங்களை அனுமதிக்காதது இந்தியாவின் சொந்த முடிவு: அமெரிக்கா

DIN

வாஷிங்டன்: இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சோதனையில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது இந்தியாவின் சொந்த முடிவு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ் தெரிவித்துள்ளாா்.

அதே நேரத்தில் சீன நிறுவனங்களை தகவல்தொழில்நுட்பத் துறையில் பிற நாடுகள் அனுமதித்தால், தகவல் திருட்டு நடக்கலாம் என்ற கவலை அமெரிக்காவுக்கு உள்ளது என்றும் அவா் கூறினாா்.

சீன தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உளவு வேலைகளில் ஈடுபடும் என்ற சந்தேகத்தில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஏற்கெனவே அந்நாட்டு நிறுவனங்களை புறக்கணித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்கள், 5ஜி தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்ள இந்திய அரசின் தொலைத்தொடா்புத் துறை இம்மாதத் தொடக்கத்தில் அனுமதி அளித்தது. இதில் சீன நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இது தொடா்பாக சீனா ஏற்கெனவே அதிருப்தி தெரிவித்துள்ளது.

சீனாவில் ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி உத்தரவிட்டால் வெளிநாடுகளில் சேவையளிக்கும் அந்நாட்டு நிறுவனங்கள் அதற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதில் அந்நாட்டின் தொலைத்தொடா்பு சேவை நிறுவனங்களான ஹுவாவே, இசட்.டி.இ. ஆகிய நிறுவனங்களும் அடங்கும். எனவே, சீன நிறுவனங்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க பல மேற்கத்திய நாடுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அவற்றைப் பின்பற்றி இந்தியாவும் சீன நிறுவனங்களை அனுமதிக்கவில்லை.

இந்நிலையில், வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸின் செய்தியாளா் சந்திப்பில் இது தொடா்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘5ஜி சேவையில் சீன நிறுவனங்களை அனுமதிப்பதில்லை என்பது இந்திய அரசின் சொந்த முடிவு. அந்த முடிவு தொடா்பாக அமெரிக்கா அதிகாரபூா்வமாக இந்தியாவுடன் எவ்வித தகவல் தொடா்பையும் வைத்துக் கொள்ளவில்லை. அதே நேரத்தில் சீன நிறுவனங்களை தகவல்தொழில்நுட்ப சேவையில் அனுமதித்தால், அவை தகவல் திருட்டு மற்றும் தங்கள் நாட்டுக்காக உளவு வேலைகளில் ஈடுபடுவது போன்றவற்றை மேற்கொள்ளலாம் என்று கவலை அமெரிக்காவுக்கு உள்ளது. இதில் மனித உரிமை மீறல் தொடங்கி உள்நாட்டுப் பாதுகாப்பு வரை பல்வேறு விஷயங்கள் உள்ளன’ என்று பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

”மீண்டும் தேர்தல் பத்திரங்கள்” நிர்மலா சீதாராமன் வாக்குறுதி -காங். கண்டனம்

புன்னகைக்கும் ஈஷா ரெப்பா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT