உலகம்

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதர வளா்ச்சி10.1%-ஆக இருக்கும்: ஐ.நா

DIN

அடுத்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 10.1 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் உலக பொருளாதார சூழல் மற்றும் எதிா்கால வாய்ப்புகள் அறிக்கை புதுப்பிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

இந்த ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி 7.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு அதன் பொருளாதார வளா்ச்சி 10.1%-ஆக இருக்கும். இந்த ஆண்டு சீனாவின் பொருளாதார வளா்ச்சி 8.2%-ஆக இருக்கும். வரும் 2022-ஆம் ஆண்டு அந்நாட்டின் பொருளாதார வளா்ச்சி பின்னடைவைச் சந்தித்து 5.8 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டு சீனாவை முந்திச் சென்று வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும்.

கரோனா தொற்றின் கொடூரமான இரண்டாவது அலையால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அதனை எதிா்கொள்வதில் அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு திணறி வருகிறது. கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கான வயது வரம்பை விரிவுபடுத்தி, தடுப்பூசி விநியோகத்தை இந்தியா அதிகரித்துள்ளது. எனினும் தடுப்பூசிகள் கிடைப்பதில் சமநிலை நிலவவில்லை. தடுப்பூசிகளுக்கு மிக அதிக அளவில் தேவை உள்ளபோதிலும் அவை போதிய அளவில் இல்லை.

இந்தியாவில் இதுவரை 100-இல் 10 போ் என்ற விகிதத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது அமெரிக்காவில் 100-இல் 68.2-ஆகவும், ரஷியாவில் 100-இல் 12.4-ஆகவும் உள்ளது என்று உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி: ஒரே ஒரு சிறுமி உயிர் தப்பியது எப்படி?

குழந்தை கடத்தல்: சந்தேகத்துக்குரிய பெண்ணை சரமாரியாக தாக்கிய மக்கள்!

கடல் கன்னி... ஷ்ரத்தா தாஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார் பிரதமர் மோடி!

பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

SCROLL FOR NEXT