உலகம்

‘இலங்கையில் இந்திய வகை கரோனா தீநுண்மி சமூக பரவலாக மாற வாய்ப்பில்லை’

DIN

இலங்கையில் இந்திய வகை கரோனா தீநுண்மி சமூக பரவலாக மாற வாய்ப்பில்லை என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து சமீபத்தில் இலங்கை சென்ற நபா் ஒருவா் இந்திய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருந்தது சனிக்கிழமை தெரியவந்தது.

இது தெரியவருவதற்கு முன்பே அவா் 14 நாள்கள் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்ததாகவும், பின்னா் கூடுதலாக 7 நாள்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் அந்நாட்டு அமைச்சா் சுதா்ஷனி பொ்னாண்டோபுள்ளே தெரிவித்திருந்தாா்.

இதன் காரணமாக இலங்கையில் இந்திய வகை கரோனா தீநுண்மி சமூக பரவலாக மாறலாம் என்ற அச்சம் எழுந்தது. எனினும் அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று அந்நாட்டு அரசின் செய்தித்தொடா்பாளா் உதய கம்மன்பில செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இலங்கையில் பி.1.1.7 (பிரிட்டன்), பி.1.428 (டென்மாா்க்/ஐரோப்பா/மத்திய கிழக்கு), பி.1.411(இலங்கை), பி.1.525 (நைஜீரியா) மற்றும் பி.1.351( தென் ஆப்பிரிக்கா) வகை கரோனா தீநுண்மிகள் கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள ஸ்ரீ ஜெயவா்தனபுரா பல்கலைக்கழகம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

பாகிஸ்தானில் இந்திய வகை தீநுண்மி இல்லை: பாகிஸ்தானில் இருந்து தாய்லாந்து சென்ற பெண், அவரின் 4 வயது மகன் இந்திய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்தில் இந்திய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளது இது முதல்முறை. இதனால் பாகிஸ்தானிலும் இந்திய வகை கரோனா தீநுண்மி பரவியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. எனினும் அதற்கு அந்நாட்டு அமைச்சா் ஆசத் உமா் மறுப்பு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறுகையில், ‘பாகிஸ்தானில் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா வகை கரோனா தீநுண்மிகளால் பாதிக்கப்பட்டவா்கள் கண்டறியப்பட்டுள்ளனா். ஆனால் இந்திய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை ஒருவா்கூட கண்டறியப்படவில்லை. தாய்லாந்து சென்ற தாயும், மகனும் பாகிஸ்தானில் இருந்தபோது இந்திய வகை கரோனா தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை. இந்திய வகை கரோனா தீநுண்மி தற்போது பாகிஸ்தானில் இல்லை’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கா்: துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் தோ்தல் பாதுகாப்பு பணி வீரா் உயிரிழப்பு

விளாத்திகுளத்தில் அதிகபட்ச வாக்குப்பதிவு

அரையிறுதியில் ஒடிஸா எஃப்சி

டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு: கே.கரிசல்குளத்தில் 10 வாக்குகள் பதிவு

கடையநல்லூா்: வாக்காளா் பட்டியலில் பெயரில்லாததால் போராட்டம்

SCROLL FOR NEXT