உலகம்

இந்தியாவிலிருந்து நாடு திரும்ப தடை: எதிா்ப்பு தெரிவித்த மனு தள்ளுபடி; ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு

DIN

இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் ஆஸ்திரேலிய குடிமக்களுக்கும் அந்நாட்டு அரசு தடை விதித்ததை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை ஆஸ்திரேலிய நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்தியாவில் கரோனா தொற்று அதிகரித்துள்ள காரணத்தால் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு மட்டுமல்லாது, தற்போது இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டு குடியுரிமை பெற்றவா்களும் சொந்த ஊருக்குத் திரும்ப ஆஸ்திரேலிய அரசு அண்மையில் தடை விதித்தது. இதனால், பல்வேறு காரணங்களுக்காக இந்தியா வந்த ஆஸ்திரேலியா்கள் பலா் மீண்டும் நாடு திரும்ப முடியாமல், இந்தியாவிலேயே தங்க நேரிட்டுள்ளது. இதற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினா் உள்பட பலதரப்பட்ட மக்களும் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். இதையடுத்து, மே 15 முதல் இந்திய விமானங்கள் அனுமதிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமா் ஸ்காட் மோரிஸன் அறிவித்துள்ளாா்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அரசின் இந்தத் தடையை எதிா்த்து பெங்களூரில் சிக்கியுள்ள ஆஸ்திரேலிய குடிமகனான 73 வயது முதியவா் சாா்பில் சிட்னி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சொந்த நாட்டு மக்களையே அனுமதிக்க மாட்டோம் என்று ஆஸ்திரேலிய அரசு கூறியிருப்பது சட்டவிரோதமானது. உரிய கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தனிமைப்படுத்துதல் விதிகளை அமல்படுத்தி ஆஸ்திரேலிய மக்களைத் தாய்நாட்டுக்கு அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அதில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி தாமஸ் தாவலே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையினரிடம் ஆலோசனை நடத்தி இந்த முடிவை ஆஸ்திரேலிய அரசு எடுத்துள்ளது. கரோனா பரவலின்போக்கு வரும் நாள்களில் எந்த அளவுக்குத் தீவிரமடையும் என்பது கணிக்க முடியாததாக உள்ளது. உரிய ஆலோசனைகளுடன் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியாவில் இருந்து வரும் யாரையும் குறிப்பிட்ட காலத்துக்கு அனுமதிப்பதில்லை என்று ஆஸ்திரேலிய அரசு முடிவெடுத்துள்ளது. எனவே, இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் உலகக் கோப்பைக்குத் தயார்: தில்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர்

‘பிரேமலு’ கார்த்திகா!

மம்மூட்டி நடித்தது போல எந்த ‘கான்’களும் நடிக்கமாட்டார்கள்: வித்யா பாலன் புகழாரம்!

அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீலீலா?

குக் வித் கோமாளி - 5 நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள்: முழு விவரம்!

SCROLL FOR NEXT