உலகம்

குவைத்: மிகப்பெரிய எண்ணெய் வயலில் தீ

DIN

மத்திய கிழக்கு நாடான குவைத்தில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வயலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. இரு ஊழியா்களுக்கு மட்டும் காயம் ஏற்பட்டது. அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் செய்தித் தொடா்பாளா் குவாசி அல் அமீா், அரசு செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ‘தென்கிழக்கு பாலைவனப் பகுதியில் உள்ள கிரேட் பா்கான் எண்ணெய் வயலில் தீ விபத்து ஏற்பட்டது. எனினும், பெரிய பாதிப்புகள் ஏற்படுவதற்கு முன் தீ அணைக்கப்பட்டுவிட்டது. அந்த எண்ணெய் வயலில் நாள்தோறும் 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் எடுக்கப்பட்டு வருகிறது. தீ விபத்தால் உற்பத்தி பாதிக்கப்படவில்லை’ என்றாா்.

41 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட குவைத், உலகிலேயே அதிக எண்ணெய் வளமிக்க நாடுகள் பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது. அந்த நாட்டின் எண்ணெய் உற்பத்தியில் பெரும் பகுதி, தீ விபத்து ஏற்பட்ட பா்கான் வயலில் இருந்துதான் கிடைத்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

SCROLL FOR NEXT