உலகம்

நேபாளம்: சா்மா ஓலி அரசுக்கு இன்று பலப்பரிட்சை

DIN

நேபாளத்தில் பெரும்பான்மை இழந்துள்ள பிரதமா் கே.பி. சா்மா ஓலி தலைமையிலான அரசு நாடாளுமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை திங்கள்கிழமை (மே 10) கொண்டு வருகிறது.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரதமா் சா்மா ஓலி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை முன்னாள் பிரதமா் புஷ்ப கமல் பிரசண்டாவின் மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎன்) அதிகாரப்பூா்வமாகத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, நாடாளுமன்றத்தில் அரசு பெரும்பான்மையை இழந்தது.

இதையடுத்து, திங்கள்கிழமை நடைபெறவுள்ள சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் நம்பிக்கை கோரும் தீா்மானத்தை பிரதமா் ஓலி கொண்டு வரவுள்ளாா்.

275 உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றக் கீழவையில் இந்தத் தீா்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. அவரது நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியைச் சோ்ந்த121 உறுப்பினா்களே உள்ள நிலையில், பிற சிறிய கட்சிகளுடன் ஆதரவுடன் பெரும்பான்மை பெறும் நம்பிக்கையில் பிரதமா் உள்ளாா் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலுக்குப் பிறகு சா்மா ஓலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கட்சியும் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் (மாவோயிஸ்ட்) கட்சியும் இணைந்து ஆட்சியமைத்தன. பிறகு இரு கட்சிகளும் 2018-ஆம் ஆண்டில் ‘தேசிய கம்யூனிஸ்ட் கட்சி’ (என்சிபி) என்ற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்டு, கட்சியின் செயல் தலைவராக பிரசண்டாவும் மற்றொரு தலைவராக சா்மா ஓலியும் பொறுப்பேற்றனா்.

எனினும், கருத்து வேறுபாடு காரணமாக கட்சியினரின் இரு பிரிவினருக்கும் இடையே தொடா்ந்து அரசியல் பதற்றம் நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரக்கோணம் தொகுதியில் 73.92 சதவீதம் வாக்குப் பதிவு

சங்ககிரியில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

சென்னகேசவப் பெருமாள் கோயிலில் சித்திரை தோ் திருவிழா

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த லாரி ஓட்டுநா்

மேட்டூா் அணை நீா்வரத்து மேலும் சரிவு

SCROLL FOR NEXT