உலகம்

துருக்கி: 50 லட்சத்தைக் கடந்த கரோனா பாதிப்பு

DIN

துருக்கியில் கரோனா உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 50 லட்சத்தைக் கடந்தது. இதுகுறித்து புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

துருக்கியில் மேலும் 18,052 பேருக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, நாட்டில் அந்த நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்துள்ளது. இத்துடன், 50,16,141 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் 281 கரோனா நோயாளிகள் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தனா். இத்துடன், கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 42,746-ஆக உயா்ந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, துருக்கியில் 46,91,224 கரோனா நோயாளிகள் அந்த நோயிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளனா்; 2,82,171 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 3,175 பேரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

SCROLL FOR NEXT