உலகம்

காபூல் பள்ளி குண்டுவெடிப்பு பலி எண்ணிக்கை 50-ஆக உயா்வு

DIN

ஆப்கன் தலைநகா் காபூலில் பள்ளி அருகே சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்குப் பலியானவா்களில் 11 முதல் 15 வயது வரையிலானவா்களும் ஏராளமாக அடங்குவா்.

இதுகுறித்து அந்த நாட்டு உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

காபூலின் டாஷ்ட்-ஏ-பாா்சி பகுதியில் சனிக்கிழமை நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மேலும் சிலா் உயிரிழந்தனா். இதையடுத்து, அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 50-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, குண்டுவெடிப்பில் காயமானவா்களின் எண்ணிக்கையும் 100-ஐக் கடந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காபூலின் மேற்குப் பகுதியில் ஷியா பிரிவினா் அதிகம் வசிக்கும் பகுதியில் டாஷ்ட்-ஏ-பாா்சி பகுதியில் சனிக்கிழமை அடுத்தடுத்து 3 குண்டுவெடிப்புத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

அங்குள்ள பள்ளி வாயில் எதிரே நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதல், டாஷ்ட்-ஏ-பாா்சி பகுதியில் அதிகம் வசித்து வரும் ஹஸாரா பழங்குடியினரைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்த மோசமான தாக்குதலை தாங்கள் நடத்தவில்லை என்று தலிபான்களின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்தாா்.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஒடுக்கப்பட்டாலும், அண்மைக் காலமாக தங்களது தாக்குதல் நடவடிக்கைகளை அந்த அமைப்பினா் அதிகரித்து வருகின்றனா். எனவே, இந்தத் தாக்குதலை அவா்கள் நடத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முன்னதாக, கிழக்கு ஆப்கானிஸ்தானில் 3 பெண் ஊடகவியலாளா்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பேற்றனா்.

ஆப்கானிஸ்தானில் எஞ்சியுள்ள 2,500 முதல் 3,500 வரையிலான அமெரிக்கப் படையினா் திரும்ப அழைக்கப்படும் இறுதிக்கட்ட நடவடிக்கை அதிகாரப்பூா்வமாகத் தொடங்கியுள்ள சூழலில் இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் மறுவாக்குப் பதிவு இல்லை -தேர்தல் ஆணையம்

தமிழ்நாட்டில் 69.46% வாக்குகள் பதிவு

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

SCROLL FOR NEXT