உலகம்

ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்ஷிப் விண்கல சோதனை ஓட்டம் வெற்றி(விடியோ)

6th May 2021 10:59 AM

ADVERTISEMENT

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் கனவுத் திட்டத்தின் அடிப்படையான ஸ்டார்ஷிப் விண்கல சோதனை ஓட்டம் முதல்முறையாக வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது. 

சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் மனிதர்கள் மற்றும் 100 டன் எடை கொண்ட சரக்குகளை கொண்டு செல்லும் விண்கலத்தை உருவாக்கும் திட்டத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் தீவிர முனைப்பில் உள்ளது. இந்நிலையில், இந்த திட்டத்தின் அடிப்படையான ஸ்டார்ஷிப் விண்கல சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. 

டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து ஏவப்பட்ட விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் 10 கிமீ தூரம் சென்று பின்னர் தரையில் வந்து செங்குத்தாக தரையிறங்கியது. கடந்த சோதனை ஓட்டங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில் இது வெற்றிகரமாக நிறைவேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ADVERTISEMENT

Tags : Spacex
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT