உலகம்

இந்தியப் பயணிகள் விமானங்களுக்கு இலங்கைத் தடை

6th May 2021 10:53 AM

ADVERTISEMENT

கரோனா பரவல் காரணமாக இந்தியப் பயணிகள் விமானங்கள் இலங்கைக்கு வர அந்நாட்டு அரசுத் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வரும் நிலையில் தங்கள் நாட்டை தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கையை இலங்கை அரசு மேற்கொண்டுள்ளது.

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து தற்போது இலங்கை அரசும் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கரோனா பரவல் குறைந்த பிறகே விமானப் போக்குவரத்து கட்டுபாடுகளைத் தளர்த்துவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

Tags : srilanka coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT