உலகம்

‘தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு அனுமதி இல்லை’: குவைத்

4th May 2021 04:32 PM

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டினருக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பல்வேறு உலக நாடுகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த பிற நாடுகளுடனான போக்குவரத்தில் கட்டுப்பாடுகளை விதித்து பல நாடுகளும் உத்தரவு பிறப்பித்துள்ளன. 

இந்நிலையில் குவைத் நாட்டில் அதிகரித்துவரும் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும்விதமாக குவைத்திற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கான புதிய அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. 

அதன்படி மே 22ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத வெளிநாட்டு பயணிகளுக்கு குவைத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. குவைத்திற்கு வரும் பயணிகள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றிதழை கட்டாயம் கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : kuwait Corona vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT