உலகம்

ஆப்கனில் வெள்ளம்: 12 பேர் பலி

4th May 2021 04:14 PM

ADVERTISEMENT

ஆப்கனில் கனமழை காரணமமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி 12 பேர் பலியானார்கள். 
ஆப்கனின் மேற்கில் உள்ள ஹெராத் மாகாணத்தில் நேற்று கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அட்ரஷ்கான் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் மற்றும் தோட்டங்களில் வெள்ளநீர் புகுந்ததால் முற்றிலும் சேதமுற்றன. 
மேலும் சாலைகளும் மழைநீரில் மூழ்கின. இதனால் பல்வேறு மாவட்டங்களில் போக்குவரத்துகள் முடங்கின. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வந்த மீட்புக்குழுவினர் அங்கிருந்த மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்தனர். 
வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 4 குழந்தைகள், பெண் என மொத்தம் 12 பேர் பலியாகியுள்ளதாக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தகக்து. 
 

Tags : Afghanistan flood
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT