உலகம்

பாகிஸ்தானில் பேருந்து விபத்து: 13 பேர் பலி; 25 பேர் காயம்

4th May 2021 08:32 AM

ADVERTISEMENT


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் அட்டோக் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை நேரிட்ட பேருந்து விபத்தில் 13 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து சென்று கயாமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர், 25 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் பெரும்பாலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டிருப்பதாகவும், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

பயணிகள் பேருந்து லாகூரிலிருந்து, வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்துக்குச் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது தெரிய வந்துள்ளது.
 

ADVERTISEMENT

Tags : pakistan accident
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT