உலகம்

இலங்கைக்கு கரோனா தடுப்பூசியை வழங்கியது சீனா

31st Mar 2021 04:49 PM

ADVERTISEMENT


கொழும்பு: சீனா வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. 

சீனா  அன்பளிப்பாக வழங்கிய இந்த தடுப்பூசி, முதல்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்குத்தான் வழங்கப்படும் என்று இலங்கை அதிகாரி தெரிவித்துள்ளார். இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்சே பெற்றுக் கொண்டார்.

உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த கரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தப் பிறகே, இது இலங்கை குடிமக்களுக்கு போடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : china srilanka vaccine
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT