உலகம்

ஈக்வடாரில் அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 2,201பேருக்கு தொற்று

31st Mar 2021 08:48 AM

ADVERTISEMENT

ஈக்வடார்: ஈக்வடாரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,201 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 327,325 ஆகவும், அதே கால அளவில் 34 பேர் உயிரிழந்துள்ளனர். இறந்தோரின் எண்ணிக்கை 11,912 ஆகவும் அதிகரித்துள்ளது என்று அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

நாட்டின் தலைநகரான குயிட்டோ அமைந்துள்ள பிச்சிஞ்சா மாகாணம், தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, குயிட்டோவில் 799 பேர் உள்பட 834 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் தென் அமெரிக்க நாடு ஒரு சிக்கலான சூழ்நிலையை எதிர்கொண்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.

நாட்டின் பல நகரங்களில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

ADVERTISEMENT

மூன்று நாள் ஈஸ்டர் வார விடுமுறை தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக மது விற்பனைக்கு புதிய கட்டுப்பாடுகளுக்கு அவசர நடவடிக்கைக் குழு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தது. 

நாட்டில் 60,358 பேர் முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக்கொண்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Tags : coronavirus Ecuador records Quito
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT