உலகம்

தாய்லாந்து: தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு கரோனா தனிமைப்படுத்துதலில் தளர்வு

27th Mar 2021 12:31 PM

ADVERTISEMENT

தாய்லாந்துக்கு வரும் கரோனா தடுப்பூசி செலுத்திய சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளித்து அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில் பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கரோனா தடுப்பூசி செலுத்துக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்பதாக  தாய்லாந்து நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் புதிய பயண நெறிமுறைகளின்படி தாய்லாந்து நாட்டிற்கு வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனை சான்றிதழை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொடர்ந்து தாய்லாந்துக்கு வந்த பிறகு, சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த செலவில் மற்றொரு கரோனா பரிசோதனையை நடத்தவும், அதனில் கரோனா தொற்று உறுதியானால் தனிமைப்படுத்துதலில் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Tags : Thailand coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT