உலகம்

ஆப்கனில் தலிபான் தாக்குதல்: 10 காவலர்கள் பலி

27th Mar 2021 03:42 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மாண்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 காவலர்கள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள லஷ்கர்கா நகரில் சனிக்கிழமை தலிபான்கள் தாக்குதலில் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் சாங்கின் மாவட்ட காவல்துறைத் தலைவர் அப்துல் முகமது சர்வாரி உள்பட 10 காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

மேலும் இருவர் காயமடைந்தனர். பிப்ரவரி மாதம் நாடு முழுவதும் பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 270 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 173 பேர் காயமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : coronavirus covid19 Afghanisthan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT