உலகம்

அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட மியான்மர் ஒத்துழையாமை இயக்கம்

27th Mar 2021 11:06 AM

ADVERTISEMENT

மியான்மர் ராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் இயற்பியல், அமைதி, வேதியியல், மருத்துவம், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் தலைசிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் விதமாக நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

மிக மதிப்பு வாய்ந்த விருதாக கருதப்படும் இந்த பரிசுக்கு பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் மியான்மரில் நடைபெற்று வரும் ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் ஒத்துழையாமை இயக்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அமைதியான வழியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வரும் இந்த இயக்கம் 2022ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஜனநாயக சார்புள்ள இயக்கத்தின் போராட்டம் வெற்றியடைந்தால் அது மியான்மருக்கு வெளியேயும் அரசியல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக மியான்மர் ராணுவ ஆட்சியில் இதுவரை 320 போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Myanmar Nobel prize
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT