உலகம்

நேபாளத்திற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை வழங்கும் இந்தியா

27th Mar 2021 04:47 PM

ADVERTISEMENT

மானிய உதவியின் கீழ் ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை நேபாளம் நாட்டிற்கு இந்தியா வழங்க உள்ளது.

பூடான், வங்கதேசம், நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, ஆப்கானிஸ்தான், மோரீஷஸ், மியான்மா், செஷல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்யவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது.

இந்நிலையில் நேபாளம் நாட்டிற்கு ஒரு லட்சம் கரோனா தடுப்பூசிகளை இந்தியா வழங்க உள்ளது. இந்தத் தகவலை மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் மாத தொடக்கத்தில், 3,48,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியாவிடமிருந்து நேபாளம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Tags : Nepal coronavirus covid19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT