உலகம்

பிரதமர் மோடியை எதிர்த்து வங்கதேசத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 4 பேர் பலி

27th Mar 2021 01:37 PM

ADVERTISEMENT

அரசுமுறை பயணமாக வங்கதேசம் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மோடியின் வருகையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தை காவல்துறையினர் கலைக்க முயன்றதில் 4 பேர் பலியாகினர்.

வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவின் அழைப்பை ஏற்று  இருநாள் பயணமாக பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (மாா்ச் 26) வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார்.

வங்கதேசத்தின் தேசிய தின கொண்டாட்டம் மற்றும் வங்கதேசத்தின் தந்தை ஷேக் முஜிபூா் ரஹ்மானின் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டமும் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வங்கதேசம் சென்றுள்ள பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 2000 மாணவர்கள் பங்கேற்றனர்.

ADVERTISEMENT

இந்தியாவில் பாஜக சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை நிகழ்த்தி வருவதாகக் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தலைநகர் டாக்காவில் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் காவல்துறையினர் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர். 

சட்டோகிராமில் நடைபெற்ற போராட்டத்தைக் கலைக்க முயன்றபோது காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்களிடையே மோதல் வெடித்தது. இதில் 4 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags : Bangladesh Modi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT