உலகம்

2 லட்சம் கரோனா இறப்புகளைக் கடந்த மெக்சிகோ

26th Mar 2021 04:22 PM

ADVERTISEMENT

அமெரிக்கா, பிரேசில் நாடுகளைத் தொடர்ந்து 2 லட்சம் கரோனா இறப்புகளை மெக்சிகோ கடந்துள்ளது.

உலகம் முழுவதும் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க பல்வேறு நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் கரோனா பரவலில் முன்னணியில் உள்ள அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து மெக்சிகோவில் கரோனா இறப்புகள் அதிகரித்து வருகின்றன. 

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி மெக்சிகோவில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மெக்சிகோவில் கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,00,211 ஆக பதிவாகியுள்ளது. 

ADVERTISEMENT

இதன்மூலம் 2 லட்சம் கரோனா இறப்புகளைப் பதிவு செய்த மூன்றாவது நாடாக மெக்சிகோ மாறியுள்ளது. மெக்சிகோவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,14,542 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT