இந்தோனேசியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் பலியானார்கள்.
இந்தோனேசியாவின் கிழக்கு ஜகார்த்தாவில் வீடு ஒன்றில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 10 பேர் பலியானார்கள்.
தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு 14 வாகனங்களில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.