கனடாவில் அனைத்து வயதினருக்கு கரோனா தொற்று தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்திவரும் நிலையில், 20 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருவதாகத் தலைமை பொதுச்சுகாதார அதிகாரி தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
புதன்கிழமை பிற்பகல் நிலவரப்படி, கனடாவில் புதிதாக 2,643 பதிவாகியுள்ளன. இதையடுத்து மொத்த பாதிப்பு 9,44,962 ஆக அதிகரித்துள்ளது. இதில் 22,754 பேர் இதுவரை இறந்துள்ளனர் மற்றும் 8,85,604 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். தற்போது, 36,310 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இதுதொடர்பாக டாம் கூறுகையில்,
குறிப்பாக இளம் வயதுடையவர்களுக்குத் தொற்று அதிகம் பரவி வருகின்றது. இதற்கு முக்கிய காரணம் சமூக இடைவெளியே சரியாக கடைப்பிடிக்காததே காரணமாகும்.
அதிலும் புதியவகை கரோனா தொற்றான SARS-CoV-2 வைரஸ் பரவுவது மிகவும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா தொற்று அதிகரித்துவருவதால் பொதுமக்கள் மேலும் விழிப்புடன் செயல்பட வேண்டும். பொதுச் சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தனிப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதே தொற்று அதிகரிக்காமல் தடுக்கமுடியும் என்று அவர் கூறியுள்ளார்.