உலகம்

ஆபாசத் தகவல்களை வடிகட்டும் வசதியுடன் ஸ்மார்ட்போன்கள்: சட்டம் கொண்டுவரும் அமெரிக்க மாகாணம்!

22nd Mar 2021 06:59 PM

ADVERTISEMENT

 

சான் பிரான்சிஸ்கோ: சிறார்களுக்கு கிடைக்காத  வகையில் ஆபாசத் தகவல்களை வடிகட்டும் வசதியுடன் ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட  வேண்டுமென்று அமெரிக்க மாகாணம் ஒன்று சட்டம் கொண்டுவர உள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாகாணம்தான் இப்படியொரு சட்டத்தினைக் கொண்டுவர உள்ளது. அதன்படி உட்டா மாகாணத்தில் இனி விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள், பயன்படுத்தும் சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய ஆபாசத் தகவல்கள் இணையத்தில் இருந்தால் அதனைத் தானாகவே வடிகட்டும் வகையில் அமைய வேண்டும் . இதற்கென தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை இந்த வசதியினை நிறுத்தி வைக்க விரும்பினால் அதற்கென தயாரிப்பு நிறுவனங்கள் தனியாக ஒரு தனிப்பட்ட சங்கேத எண்ணை வழங்க வேண்டும். ஒருவேளை புதிதாக வாங்கிய ஒருவர் அந்தக் கருவியை பயன்படுத்தத் துவங்கும்போது இந்த வசதியானது தானாகவே செயல்படா விட்டால், தயாரிப்பு நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்படும். ஒவ்வொரு முறைக்கும் பத்து டாலர் என்ற அளவில் அபராதம் இருக்கும்.

ADVERTISEMENT

அங்குள்ள காண அவையில் ஏற்கனவே இதற்கான மசோதா நிறைவேறி விட்டது. தற்போது இம்மசோதாவானது மாகாண ஆளுநர் ஸ்பென்சர் கோஸ் ஒப்புதலுக்காக் காத்திருக்கிறது.

இதுகுறித்து சரியாகப் பரிசீலித்து வரும் 25-ஆம் தேதியன்று முடிவெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் இந்த் மசோதாவானது சட்டமாக நிறைவேற்றப்பட்டால், நீதிமன்றத்தில் வழக்குகளைச் சந்திக்க நேரும் என்று சட்ட வல்லுனர்கள்  கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT