உலகம்

கரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்குத் தடை: ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களிடம் பேசத் தயாராகும் பிரிட்டன் பிரதமர்

22nd Mar 2021 03:03 PM

ADVERTISEMENT

 

லண்டன்: பிரிட்டனுக்கு கரோனா தடுப்பூசிகளை  ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கும் விவகாரம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்  தலைவர்களிடம், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதுதொடர்பாக பிரிட்டன் ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு கரோனா தடுப்பூசிகளை  ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருகிறது. அதற்காக வியாழனன்று இணைய வழி உரையாடல் நடைபெறும் உள்ளது. அப்படிப்பட்ட எந்த ஒரு செயல் திட்டத்திற்கும் அனுமதியளிக்க கூடாது என்று கூறி பிரெஞ்சு அதிபன் இம்மானுவேல் மேக்ரோன் ,ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் உள்ளிட்டோரிடம், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

ADVERTISEMENT

முன்னதாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்கும் செயல்பாடு மிகவும் மெதுவாக இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஒன்றியம் முழுமைக்கும் சேர்த்து 12 சதவிகிதம் பேருக்கு மட்டுமே இதுவரை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு இருந்த நிலையில், பிரிட்டனில் 40 சதவிகிதத்திற்கும் மேலானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. அதேநேரத்தில் பிரிட்டனில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏற்றுமதி செய்யப்படும் கரோனா தடுப்பூசிகளின் சதவிகிதமும் குறைவாகவே உள்ளது. 

எனவே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இருந்து உற்பத்தியாகும் ஆக்ஸ்போர்ட் - அஸ்ட்ரா சனேகா கரோனா தடுப்பூசிகளை  பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று  ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவரான உர்சுலா வான் டேர் லேயென் எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.     

அதேசமயம் ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய நடவடிக்கைகளைக் கைவிட வேண்டுமென்று பிரிட்டன் தலைவர்கள்  வேண்டுகோள் வைத்துள்ளனர்.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT