உலகம்

துருக்கியில் 30 லட்சத்தை தாண்டிய கரோனா பாதிப்பு

22nd Mar 2021 11:07 AM

ADVERTISEMENT

துருக்கியில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. 
இதுகுறித்து அந்நாட்டின் சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 20,428 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 30,13,122 ஆக உயர்ந்துள்ளது. 
அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 102 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 30,061ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவிலிருந்து 17,615 பேர் குணமடைந்தனர். 
இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 28,25,187ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 3,63,55,374 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் நேற்று 1,89,906 பேருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டன. 
இதுவரை 8,018,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT