உலகம்

சொந்தமாக சமூக வலைத்தளம் ஆரம்பிக்கிறார் அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப்?

22nd Mar 2021 04:30 PM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக சமூக வலைத்தளம் ஒன்றை ஆரம்பிக்கிறார் என்ற தகவல்  வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகரான ஜேசன் மில்லர், 'தி ஹில்' செய்தி இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கவுள்ள புதிய சமூக வலைத்தளமானது தற்போதுள்ள சூழலை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் இருக்கும். அதெற்கென பல்லாயிரக்கணக்கான புதிய பயனாளர்கள் கிடைப்பார்கள்.

ADVERTISEMENT

ட்ரம்ப் என்ன செய்ய இருக்கிறார் என்பது குறித்து அறிய அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

இதற்காக பல்வேறுபட்ட குழுக்களுடன் தனது ப்ளோரிடா இல்லத்தில் ட்ரம்ப் தொடர்ந்து தீவிரமாக ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.  

ஆனால் ட்ரம்ப் தரப்பில் இருந்து இதுதொடர்பாக எதுவும் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வியடைந்தவுடன் கடந்த ஜனவரி 6-ஆம் தேதியன்று அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள 'கேபிடல் ஹில்' பகுதியில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் பெரும் வன்முறையில் ஈடுபட்டனர். இதற்கு காரணமாக ட்ரம்ப்பின்  பதிவுகள் அமைந்திருந்தது என்று கூறி ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூ ட்யூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இருந்து அவரது கணக்கு தற்காலிகமாக நீக்கப்பட்டது.

பின்னர் சில நாட்கள் கழித்து ட்ரம்ப்பின்  கணக்கினை  ட்விட்டர் நிரந்தரமாக நீக்கியது குறிப்பிடத்தக்கது.     

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT