ரஷியாவில் இன்று புதிதாக 9,284 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டுச் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் 9,284 பேர் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாட்டில் மொத்த பாதிப்பு 4,46,6,153 ஆக அதிகரித்துள்ளது.
அதிகப்படியாக மாஸ்கோவில் 1,586 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. அதைத் தொடர்ந்து செயின்ட் பிட்டர்பர்க்கில் 865, மாஸ்கோ பிராந்தியத்தில் 646 பேருக்கும் தொற்று பதிவாகியுள்ளது.
மேலும், ஒரேநாளில் 361 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் இதுவரை 95,391 பேர் தொற்று காரணமாக இறந்துள்ளனர். அதேசமயம் 24 மணி நேரத்தில் 7,790 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 4,07,71,85 நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.