டோக்யோ: ஜப்பானில் முதல் முறையாக, தாயிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இது அந்நாட்டில் முதல் முறையாக கரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தாயிடமிருந்து, குழந்தைக்கு கரோனா பரவியிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கரோனா பாதித்த 52 கர்ப்பிணிகளுக்கு குழந்தை பிறந்தது. அதில், ஒரே ஒரு குழந்தைக்குத்தான் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அந்த குழந்தைக்கும் கரோனா தொற்றால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த நிலையில் கரோனா வைரஸ் குறித்து ஆராய்ச்சி செய்து வரும் குழுவினர், வெளிநாடுகளிலும் கரோனா பாதித்த தாயிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது.
இது குறித்து நிஹோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மொரியோகா இசிரோ என்ற பேராசிரியர் கூறுகையில், தாயிடமிருந்து குழந்தைக்கு மிகக் குறைந்த அளவில் கரோனா தொற்று பரவுகிறது, இது மிக லேசான அறிகுறிகளை குழந்தைக்கு ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.