உலகம்

கூகுள் நிறுவன உதவித் தலைவர் 'திடீர்' ராஜிநாமா!

22nd Mar 2021 03:29 PM

ADVERTISEMENT

 

புது தில்லி: கூகுள் நிறுவன உதவித் தலைவர் செஷா சென்குப்தா தனது பதவியினை 'திடீர்' என்று ராஜிநாமா செய்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தில் கடந்த 15 ஆண்டுகளாக  உதவித் தலைவர் மற்றும் பொது மேலாளராகப்  பணிபுரிந்து வந்தவர்  இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செஷா சென்குப்தா. இவர் கூகுள் நிறுவனத்தில் நிதிச் சேவைகள், கூகுளின் 'நெக்ஸ்ட் பில்லியன்' உள்ளிட்ட முக்கிய பிரிவுகளைக்  கவனித்து வந்தார். இவரது கண்காணிப்பில் வெளியான 'கூகுள் பே' சேவையானது உலக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செஷா சென்குப்தா தனது பதவியினை 'திடீர்' என்று ராஜிநாமா செய்துள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் தனது 'லிங்க்ட் இன்' சமூக வலைதள பக்கத்தில், 'புதிய செயல்திட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக கூகுளை விட்டு தான்  வெளியேறி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தனது சக ஊழியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'உங்களில் பலபேருக்கு இது அதிர்ச்சியாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். அதற்காக வருந்துகிறேன். ஆனால் நாம் பூமியில் வாழும் நேரமே மிக முக்கிய செல்வம் என்று நான் அடிக்கடி சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். எனவே எனக்கான புது வழி ஒன்றைக் கண்டறிவதுதான் சரியாக இருக்கும். கூகுள் நிறுவனத்தில் நீங்கள் அனைவரும் சேர்ந்து எனக்களித்த அழகான தருணங்களை நினைத்து மகிழ்கிறேன்.

என் மேல் நம்பிக்கை வைத்ததற்காக கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.   

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT