உலகம்

கரோனா பலி: பிரேசிலில் 3 லட்சத்தை நெருங்குகிறது

22nd Mar 2021 02:41 PM

ADVERTISEMENT

பிரேசிலில் கரோனா பலி எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது. 
உலக அளவில் கரோனா பாதிப்புகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது. கடந்த சில நாள்களாக பிரேசிலில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. 
அந்நாட்டில், கடந்த 24 மணிநேரத்தில் 47,774 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,19,98,233ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு ஒரேநாளில் 1,290 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 2,94,115ஆக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 12,54,185 பேர் சிகிச்சையில் உள்ளனர். 
அவர்களில் 8,318 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். இதுவரை கரோனாவிலிருந்து 10,449,933 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT