உலகம்

ஆஸ்திரேலியாவில் வெள்ளம்: 18,000 பேர் வெளியேற்றம்

22nd Mar 2021 03:03 PM

ADVERTISEMENT

 

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பெய்துவரும் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார்  18 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக அந்நாட்டு பிரதமர் கிளாடிஸ் கூறியுள்ளார். 

மத்திய வடக்கு கடற்கரை பகுதியில் சுமார் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். நேபியன், ரிச்மண்ட் பள்ளத்தாக்கு மற்றும் ஹாக்ஸ்பரி பிராந்தியத்தில் இன்றுவரை 3 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

பலத்த மழை தொடரும் என்பதால் உள்ளூர்வாசிகள் கவனமாக இருக்கவும் என்று அந்நாட்டுப் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். 

ADVERTISEMENT

நியூ சவுத் வேல்ஸில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. 200-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டன. அங்குள்ள சாலைகள் அடைக்கப்பட்டுள்ளது. 

வெள்ளத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 

Tags : Australia Floods
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT