பிரேசிலில் கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து 4-வது சுகாதார அமைச்சர் மாற்றப்பட்டுள்ளார்.
தற்போது, புதிய சுகாதார அமைச்சராக டாக்டர் மார்செலோ குயிரோகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் பிரேசிலிய இருதவியல் சங்கத்தின் தலைவர் ஆவார்.
பிரேசிலில் கரோனா இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இருந்த பாதிப்பில் இந்தியாவை முந்தியுள்ளது பிரேசில்.
கடந்தாண்டு ராணுவ ஜெனரல் பிரேசிலின் சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மேலும், பிரேசிலின் முன்னாள் சுகாதார அமைச்சர் லூயிஸ்ஹென்ரின் மாண்டெட்டா கடந்த ஏப்ரல் 2020-இல் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக நெல்சன் டீச் நியமிக்கப்பட்டார். இவரும் சில வாரங்களிலேயே ராஜினாமா செய்தார். மேலும் பஸுல்லோ இடைக்கால சுகாதார அமைச்சரானார். இறுதியில் நிரந்தரமாகப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.