உலகம்

இத்தாலியில் மீண்டும் நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிப்பு

13th Mar 2021 05:14 PM

ADVERTISEMENT

ஈஸ்டர் பண்டிகையின் போது கரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் பின்பற்றப்படும் என இத்தாலி பிரதமர் அறிவித்துள்ளார்.

உலகின் பல நாடுகளில் மீண்டும் கரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இத்தாலியில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாட்டின் லோம்பார்டி, லோசியோ உள்ளிட்ட 7 நகரங்களில் கரோனா தொற்று பரவல் அதிக பாதிப்புகளை பதிவு செய்துள்ளன.

இந்நிலையில் இத்தாலியில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடு தழுவிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு எதிர்வரும் திங்கள்கிழமை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலி, கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது இந்த வாரம் கரோனா பரவல் 10% அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT