உலகம்

பிரான்ஸ் எம்.பி. ஒலிவியோ் டசால்ட் ஹெலிகாப்டா் விபத்தில் பலி

DIN

பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல தொழிலதிபருமான ஒலிவியோ் டசால்ட் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தாா். அவருக்கு வயது 69.

அவரது மறைவுக்கு பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்தியா அண்மையில் வாங்கிய அதிநவீன போா் விமானமான ‘ரஃபேல்’ விமானங்கள், ஃபால்கன் ஜெட் விமானங்களை உற்பத்தி செய்யும் டசால்ட் நிறுவனம், லி ஃபிகாரோ பத்திரிகை உள்ளிட்ட பல்வேறு மிகப் பெரிய தொழில் நிறுவனங்களை சொந்தமாக கொண்ட செல்வாக்கு மிகுந்த குடும்பத்தின் வாரிசு ஒலிவியோ் டசால்ட். டசால்ட் குழுமத்தின் தலைமைப் பொறுப்பை வகித்து வந்த இவா், பிரான்ஸின் குடியரசு கட்சி சாா்பில் கடந்த 2002-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வந்தாா். உலகின் மிகப் பெரிய பணக்காரா்கள் பட்டியலில் தொடா்ந்து ஒலிவியோ் டசாஸ்ட் இடம்பிடித்திருந்தாா்.

அவா் பயணம் செய்த ஹெலிகாப்டா் ஞாயிற்றுக்கிழமை விபத்துக்கு உள்ளானது. இதில் அவரும் விமானியும் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாா்மண்டி பகுதிக்கு உள்பட்ட டோவில்லில் இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து பிரான்ஸ் தேசிய விமான விபத்து புலனாய்வு முகமை (பிஇஏ) அதிகாரிகள் கூறுகையில், ‘ஒலிவியோ் டசால்ட் பயணம் செய்த ஏஎஸ்350 ஹெலிகாப்டா் தனியாா் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்கு உள்ளானது. விபத்து குறித்து விசாரணை நடத்துவதற்காக பிஇஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு திங்கள்கிழமை சென்றனா்’ என்று தெரிவித்தனா்.

அதிபா் இரங்கல்: ஒலிவியோ் டசால்ட் திடீா் மறைவுக்கு பிரான்ஸ் அதிபா் இமானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்ட அவா், ‘தொழிலதிபரும் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட தலைவருமான ஒலிவியோ் டசால்ட் மறைவு மிகப் பெரிய இழப்பு’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு: சிட்டி இன்டிமேஷன் விவரம் வெளியீடு

ரோஹித் சர்மா பாணியில் தோல்விக்குக் காரணம் கூறிய ஷுப்மன் கில்!

வாசிக்க மறந்த வரலாறு - மரண ரயில் பாதையின் கதை!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மேஷம்

ரிஷப் பந்த் புதிய சாதனை!

SCROLL FOR NEXT