உலகம்

குஜராத், ஹிமாசலில் மிதமான நிலநடுக்கம்

DIN

குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்போ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை.

குஜராத்தில் கட்ச் மாவட்டத்தில் காலை 7.42 மணிக்கு பூமிக்கு அடியில் 18.6 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவு கோலில் 3.2 அலகுகளா இந்த நிலநடுக்கம் பதிவானது என்று காந்திநகரில் உள்ள புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை. குஜராத்தின் கட்ச் பகுதி அதிகஅளவில் நிலநடுக்கம் ஏற்படும் இடமாக உள்ளது.

ஹிமாசல பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் காலை 10.20 மற்றும் 10.38 மணியளவில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் முறையே 3.6, 3.5 என்ற அலகில் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலநடுக்கங்களால் யாருக்கும் காயமோ, பெரிய அளவிலான சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

யுவன் இசையில் ‘ஸ்டார்’ படத்தில் மெல்லிசை பாடல்!

காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்!

நம்பிக்கையை தகர்க்கும் 'இரண்டு இளவரசர்கள்': யாரைச் சொல்கிறார் மோடி

12ஆவது சுற்று: முதலிடத்தில் இந்திய வீரர் உள்பட மூவர்!

SCROLL FOR NEXT