உலகம்

இராக்கில் அடுத்த 2 வாரங்களுக்கு பொதுமுடக்கம் நீட்டிப்பு

IANS

இராக்கில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், அடுத்த இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு நீட்டித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தன. 

இதுதொடர்பாக திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், 

சமீபமாக நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அந்தவகையில் மார்ச் 09 முதல் மார்ச் 22-ம் தேதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது. அதில், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை ஊடரங்கு பிறப்பித்துள்ளது. 

கரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொற்று பரவல் மேலும் அதிகரிக்காத வகையில் பொது முடக்கத்தை நீட்டித்துள்ளது அந்நாட்டு அரசு. 

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,468 பேருக்குத் தொற்று பரவியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 7,31,016 ஆக உயர்ந்துள்ளது. ஒரேநாளில் 24 பேர் பலியான நிலையில் இதுவரை 13,596 பேர் இறந்துள்ளனர். 

தொற்று பாதித்த 6,64,461 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவப்பு நிறத்திலிருந்து காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

திருக்கழுக்குன்றத்தில் பஞ்ச ரத தேரோட்டம்!

ஒடிசா படகு விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

SCROLL FOR NEXT