உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 11.66 கோடியைத் தாண்டியது: பலி 25.92 லட்சம் பேர் பலி

DIN


வாஷிங்டன்: உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11.66 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

சீனாவிலிருந்து பரவிய கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில், சனிக்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 11,66,70,105 பேருக்கு நோய்த் தொற்று பாதித்துள்ளது. அவா்களில் 25,92,085 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். மேலும், 9,22,82,109 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 2,17,95,911 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 89,431 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,95,93,704    கோடியைத் தாண்டியுள்ளது. பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 35 ஆயிரத்து 563-ஆக உயர்ந்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 67,281 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,794 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று பாதிப்பில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,11,91,864 பேர் பாதிக்‍கப்பட்டுள்ளனர். இதுவரை 1,57,693 பேர் உயிரிழந்துள்ளனர். 

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்‍கப்பட்டோர் எண்ணிக்‍கை 1,08,71,843 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 75,337 பேருக்கு தொற்று பாதிப்பும், 1,760 பேர் உயிரிழந்துள்ளனர். உலகின் தொற்று பாதிப்பால் அதிகம் உயிரிழந்தோர் பட்டியலில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 2,62,948     பேர் பலியாகியுள்ளனர். மூன்றாவது இடத்தில் மெக்ஸிகோ உள்ளது. அங்கு இதுவரை 1,89,578 பலியாகியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

SCROLL FOR NEXT