உலகம்

சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல்: 20 பேர் பலி

6th Mar 2021 03:06 PM

ADVERTISEMENT

சோமாலியாவில் மர்மநபர்கள் நடத்திய கார்குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாகினர்.

சோமாலியா தலைநகர் மொகடிசுவில் ஒரு உணவகத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் 20 பேர் பலியாகினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

ADVERTISEMENT

Tags : Somalia bomb blast
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT