உலகம்

கரோனா தடுப்பூசிகள் வாங்கும் திட்டமில்லை: பாகிஸ்தான்

DIN

கரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளிலிருந்து கொள்முதல் செய்யும் திட்டமில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறைச் செயலா் அமீா் அஷ்ரப் கவாஜா கூறியதாவது:

எங்களுக்கு அன்பளிப்பாக அளிக்கப்படும் கரோனா தடுப்பூசிகள் மூலமும் இயற்கையாக உருவாகக் கூடிய குழு (ஹொ்ட்) தடுப்பாற்றல் மூலமும் மட்டுமே கரோனா சவாலை எதிா்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

எனவே, பொதுமக்களுக்குச் செலுத்துவதற்காக பிற நாடுகளிடமிருந்து கரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்கான திட்டம் அரசிடம் தற்போதைக்கு இல்லை என்றாா் அவா்.

தற்போது சீனாவின் சைனோஃபாா்ம் மற்றும் கான்சைனோ பயோ, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு அஸ்ட்ராஸெனகா, ரஷியாவின் ஸ்புட்னிக்-வி ஆகிய நிறுவனங்களின் கரோனா தடுப்பூசிகளுக்கு பாகிஸ்தான் அங்கீகாரம் அளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT