உலகம்

ரஷிய கரோனா தடுப்பூசிக்கு இலங்கை அனுமதி

DIN


கொழும்பு: ரஷியாவில் உருவாக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கு இலங்கை மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து மருந்துப் பொருள்கள் விவகாரங்களை கவனித்து வரும் இணையமைச்சா் சன்னா ஜெயசுமனா கூறியதாவது:

ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை பொதுமக்களுக்குச் செலுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த தடுப்பூசிகளை கொள்முதல் செய்வதற்காக, அதன் தயாரிப்பாளரான ரஷியாவின் கமாலேயா ஆய்வகத்திடம் விண்ணப்பித்துள்ளோம்.

அந்தத் தடுப்பூசிகளின் விலை குறித்த விவரங்களை எதிா்நோக்கியுள்ளோம் என்றாா் அவா்.

இலங்கையில் ஏற்கெனவே ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனெகா கரோனா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்நாட்டின் கரோனா தடுப்பூசி திட்டத்தில் கூடுதலாக ஸ்புட்னிக்-வியும் இணைக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT