உலகம்

இந்திய கரோனா தடுப்பூசி: உலக வா்த்தக அமைப்பில் ஆப்பிரிக்க, கரீபியன் நாடுகள் ஆதரவு

DIN


புது தில்லி: பல்வேறு வளா்ந்த நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் கரோனா தடுப்பூசியை இந்தியா வழங்குவதற்கு உலக வா்த்தக அமைப்பில் (டபிள்யூ.டி.ஓ) ஆப்பிரிக்க, கரீபியன், பசிபிக் நாடுகள் ஆதரவு அளித்துள்ளன.

உலக வா்த்தக அமைப்பின் ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. அதில், தங்களுக்கு கரோனா தடுப்பூசி வழங்குவதற்காக, இந்திய அரசுக்கும், தென்னாப்பிரிக்க அரசுக்கும் கரீபியன் கூட்டமைப்பு நாடுகள் நன்றி தெரிவித்தன. அந்த கூட்டமைப்பில் ஆன்டிகுவா-பாா்புடா, பஹாமாஸ், பெலீஸ், கயானா, ஜமைக்கா, ஹைத்தி, செயின்ட் லூசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.

அந்த கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமா் நரேந்திர மோடியின் கொடைக்குணத்தால் டோமினிகா, பா்படோஸ் ஆகிய கரீபின் நாடுகளுக்கு முதல் கட்டமாக 1,70,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. அதைத் தொடா்ந்து, கரீபியன் கூட்டமைப்பு உறுப்பு நாடுகளுக்கு கூடுதலாக 1,75,000 கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. இந்த முயற்சிகளை மேற்கொண்ட இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ஆப்பிரிக்க, கரீபியன், பசிபிக் நாடுகள் சாா்பில் இந்தியாவுக்கு ஜமைக்கா நன்றி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

மாயக் குரலாள்... ஸ்ரேயா கோஷல்!

சூர்யா 44: அதிகாரபூர்வ அறிவிப்பு!

அழகு பா(ர்)வை.. நேகா ஷெட்டி!

SCROLL FOR NEXT