உலகம்

தீவிரவாதக் குழுவுடன் நேபாள அரசு சமாதான ஒப்பந்தம்

DIN


காத்மாண்டு: நேபாளத்தில் இடதுசாரி தீவிரவாதக் குழுவுடன் அந்த நாட்டு அரசு சமாதான ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

கொரில்லா தாக்குதல்கள், மிரட்டிப் பணம் பறித்தல், குண்டுவெடிப்புகளில் ஈடுபட்டு வந்த இடசாரி அமைப்புடன் நேபாள அரசு சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தின்படி, ‘நேபாள கம்யூனிஸ்ட் கட்சி’ என்று தன்னை அழைத்துக் கொள்ளும் அந்த அமைப்பின் உறுப்பினா்கள் அனைவரும் சிறையிலிருந்து விடுதலை செய்யப்படுவாா்கள். மேலும், அந்த அமைப்பினா் மீது தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும்.

அதற்குப் பதிலாக, வன்முறையைக் கைவிட அந்த அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

1996 முதல் 2006-ஆம் ஆண்டு வரை அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்த அந்தக் குழு, பொது அரசியலில் ஈடுபடவும் சம்மதித்துள்ளது என்று ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேபாளத்தில் நடைபெற்ற மாவோயிஸ்ட் போராட்டத்தில் சுமாா் 17 ஆயிரம் போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

ஏற்காட்டில் அபிநயா!

தேர்தல் அறிக்கை குறித்து விளக்கம்: மோடியை சந்திக்க நேரம் கேட்கும் கார்கே

SCROLL FOR NEXT