உலகம்

ஆப்கனில் தலிபான்கள் தாக்குதல்: 9 காவல் அதிகாரிகள் பலி

4th Mar 2021 06:18 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதல் காவல்துறை அதிகாரிகள் 9 பேர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் நாட்டின் குண்டூஸ் நகரில் பாதுகாப்பு சோதனைச் சாவடி மீது வியாழக்கிழமை தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இந்த திடீர் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த 9 பேர் பலியாகினர். 

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து ஆப்கானிஸ்தான் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை காந்தஹார் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினரால் தலிபான் அமைப்பைச் சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT