உலகம்

ஆப்கனில் துப்பாக்கிச்சூடு: 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலி

4th Mar 2021 06:37 PM

ADVERTISEMENT

ஆப்கனில் மர்மநபர்கள் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 7 தொழிற்சாலை பணியாளர்கள் பலியானார்கள். 
ஆப்கனின் சொர்க்ஹோர்ட் மாவட்டத்தில் நேற்றிரவு தொழிற்சாலை பணியாளர்கள் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 7 பணியாளர்கள் பலியானார்கள். 
இதுதொடர்பாக 4 பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் தெரிவரவில்லை. 
எனினும் இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Tags : afghanistan
ADVERTISEMENT
ADVERTISEMENT