உலகம்

பிரேசிலில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா பலி 

4th Mar 2021 01:17 PM

ADVERTISEMENT

 

பிரேசிலில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கரோனா இறப்புகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,910 கரோனா பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பலி 2,59,271 ஆக உயர்ந்துள்ளது. 

ADVERTISEMENT

மேலும் ஒரேநாளில் 71,704 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ள நிலையில் இதுவரை தொற்றுக்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,718,630 ஆக அதிகரித்துள்ளது. 

அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பலி எண்ணிக்கையில் பிரேசில் இரண்டாம் இடத்தையும், பாதிப்பில் அமெரிக்கா, இந்தியாவை தொடர்ந்து பிரேசில் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது. 

இதுவரை நாட்டில் சுமார் 7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் முதல்கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது கட்டமாக 2.23 லட்சம் தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT